நடிகர் சங்கத் தலைவருக்கு தொடரும் எதிர்ப்புக்கள்..!! முதல்வரிடம் செல்ல உள்ள புகார்கள்..!!


திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல் முறையில் திரையிட செய்யும் கியூப், யூ.எஃப்.ஒ நிறுவனங்கள் டிஜிட்டல் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தன

ஆனால் அது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவ, தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில்தல் புதிய திரைப் படங்கள் ஏதும் திரையிடப்போவதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

விஷாலின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டைரக்டரும், தயாரிப்பாளருமான பவித்திரன் தன்னுடைய தாராவி படத்தை நாளை வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.


இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன என்பது குறிபிடத்தக்கது

இது குறித்து தயாரிப்பாளர் பவித்ரன் கூறியது,

தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் கிளை போல நடத்தும் விஷால், தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயல்பட வில்லை

மேலும், இது தொடர்பாக ஓபிஎஸ் சந்தித்து முறையிட்டிருப்பதாகவும், விரைவில் முதல்வரையும் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி