அஜித்தைப் பார்த்து ஸ்ரீதேவி சொன்ன ஒரு வார்த்தை..!! வைரலாகிய தகவலால் சோகத்தில் ரசிகர்கள்..!!


ஓரிரு நாட்களுக்கு முன்பு லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் இந்த சம்பவம் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில ரசிகர்கள் ஸ்ரீதேவி இறந்ததை நம்ப முடியாமல் தங்களது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். சில ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார்கள். இவரின் இறப்பு இந்திய சினிமாவிற்கு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் ரஜினி,கமல்,விஜய்,அஜித் என அனைவரிடமும் இணைந்து நடித்துவிட்டார் இவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் ஸ்ரீதேவியுடன் அஜித் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார், அந்த காட்சி மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி கேட்டதற்கு தமிழ் சினிமாவில் மிக மிக எளிமையான நடிகர் என்றால் அது அஜித் குமார்தான் இவர் இங்க்லீஷ் விங்கிலீஷ் படத்திற்காக கார்,ஹோட்டல்,என எந்த ஏற்பாடும் வேண்டாம் என கூறியுள்ளார்.


எப்பொழுது வந்தார் எப்படி வந்தார் என்றே தெரியவில்லை மிகவும் எளிமையாக வந்தார், இவர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் இவர் ஷாலினி மூலம் தான் அஜித்தின் நட்பு எனக்கு கிடைத்தது என கூறியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி இறந்ததை நினைத்து அஜித் ரசிகர்கள் மிகவும் வருந்துகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி