அட.. அந்த நடிகருக்காக இப்படியொரு முடிவா..? என்ன தாராள மனசு..!!


ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.O’ படத்தின் VFX பணிகள் இன்னும் முடிவடையாததால் ‘காலா’ படத்தை முன்கூட்டியே இறக்க இருக்கின்றனர்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்திருக்கும் ‘நீராளி’ திரைப்படம் ஏப்ரல் கடைசி வாரத்தில் வெளியாவதாக இருந்து ‘காலா’ ரிலீஸால் தற்போது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ரஜினியின் ‘காலா’ வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.


மோகன்லால் தற்போது நடித்து வரும் நீராளி’ படம் குறுகிய கால தயாரிப்பாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சம்மர் ரிலீஸாக இதை வெளியிட வேண்டும் என்று தான் சுமார் 36 நாட்களிலேயே இதன் படப்பிடிப்பை திட்டமிட்டு முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வர்மா.

அதற்கேற்றபடி ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாரதவிதமாக ரஜினியின் ‘காலா’ வரும் ஏப்ரல் 27-ம் ரிலீஸாக இருப்பதாக தயாரிப்பாளர் தனுஷின் அறிவிப்பு வெளியானது.

இதனால் கேரளாவில் அதிக அளவிலான தியேட்டர்கள் காலாவுக்கு ஒதுக்கப்படும் என்பதால், வீண் போட்டியும் அதனால் வசூல் சிதறலும் வேண்டாமே என ஒரு வாரம் கழித்து மே 3-ம் தேதி ‘நீராளி’ படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!