நம்ம அஜித்துக்கா இப்படியொரு ஆசை..!! நிறைவேற்றுவாரா இயக்குனர் சிவா..?


தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தான் தொடங்கவுள்ளதாம்

அதை தொடர்ந்து 4 மாதத்தில் படப்பிடிப்பு முடிய, படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்நிலையில் விசுவாசம் படத்திற்காக அஜித் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அஜித்தை பார்க்க ஏதோ கேங்ஸ்டர் லுக்கில் இருந்தார்.


இதன் மூலம் போலிஸ்-ரவுடி கதை அஜித் டபுள் ரோல் செய்கிறார் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

மேலும், படத்தில் அர்ஜுனை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடக்க, அஜித் ரவுடியாகவும், அர்ஜுன் போலிஸாகவும் நடிக்க வாய்ப்புள்ளதாம்.

எது எப்படியோ படத்தை எப்படியாவது 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!