அட.. இதெல்லாம் தேவையில்லாத விஷயம்..!! அலுத்துக் கொண்ட கண்ணசைவு நாயகி..!!


ஒரு அடார் லவ் பட பாடல் வரிகள் இஸ்லாம் மதத்தை அவதிப்பதாக இருக்கிறது என்று புகார் தெரிவித்துள்ளது குறித்து ப்ரியா வாரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தில் வந்த மாணிக்ய மலராய பாடல் வீடியோவில் கண்ணால் பேசி பிரபலமானார் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த பாடல் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி சில முஸ்லீம் இளைஞர்கள் ஹைதராபாத் காவல் நிலையத்தில் ப்ரியா மற்றும் படக்குழு மீது புகார் அளித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ப்ரியா வாரியர் கூறியிருப்பதாவது, இது தேவையில்லாத புகார். மாணிக்ய மலராய பாடல் பாரம்பரிய முஸ்லீம் பாடல் ஆகும். அதில் இஸ்லாம் மத உணவர்வுகளை புண்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை என்றார். மாணிக்ய மலராய பாடல் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை என்று ஒரு அடார் லவ் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மானும் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!