ரசிகர்களிடம் கெஞ்சி கேட்ட ஜூலி..!! அதுக்காக இப்படியா செய்வீங்க..!!


பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள மன்னர் வகையறா படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஜூலி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் ஜூலியும், விமலும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

நான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள முதல் படம் மன்னர் வகையறா ரிலீஸாக உள்ளது. தயவு செய்து படத்தை பார்த்து ஆதரிக்கவும் என்று ட்வீட்டியுள்ளார் ஜூலி.


ஜூலியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இது போன்று பல படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிலர் ஜூலியை வாழ்த்திய போதிலும் சில நெட்டிசன்கள் வழக்கம் போன்று அவரை கலாய்த்துள்ளனர். கண்டிப்பாக உங்களின் படத்தை பார்க்கவே மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

உத்தமி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஜூலியானா. சமூக அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி