முன்னணி நடிகையிடம் இருந்து விருது வாங்கிய உலக நாயகன்..!! என்ன சொன்னார் தெரியுமா..?


இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா நிகழ்ச்சி மும்பையில் நேற்று இரவு நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகா படுகோன், பிரிநிதி சோப்ரா, ஷாகித் கபூர்,சித்தார்த் மல்கோத்ரா, ஹினாகான்,அபிஷேக் பச்சன்,சோனாக்‌ஷி சின்கா, உள்பட இந்தி திரையுலகின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதை, நடிகை ஸ்ரீதேவி வழங்கினார். பெற்றுக்கொண்ட கமல் பேசும்போது,


ஸ்ரீதேவியிடம் இருந்து இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது ஒரு பெரிய பயணமாக இருந்தது. எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றன என்றார். விழாவில் ஸ்டைலிஷ் நடிகை விருது தீபிகா படுகோனுக்கும், ஸ்டைலிஷ் நடிகர் விருது ஷாகித் கபூருக்கும், பெண் சாதனையாளர் விருது நடிகை ரேகாவுக்கும் வழங்கப்பட்டது. அமிதாப் பச்சனுக்கு ஸ்டைல் சூப்பர் ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB