மன்னிப்பு கேட்ட குஷ்பு

நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் தன்னை வித்தியாசமான தோற்றங்களில் புகைப்படங்கள் எடுத்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தலைமுடியை குட்டையாக்கியது போன்ற ஹேர் ஸ்டைலில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அந்த ஹேர் ஸ்டைலை சக நடிகைகள் பலரும் பாராட்டினர். எதற்காக தலைமுடியை குட்டையாக வெட்டினீர்கள்?. புதிய படம் அல்லது தொலைக்காட்சி தொடருக்கான தோற்றமா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு வெளியிட்ட பதிவில், “நான் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டதாக நினைத்து நிறைய பேர் எனக்கு குறுந்தகவல்கள் அனுப்பினர். நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். எனது புதிய படத்தின் தோற்றத்துக்காக அப்படி குட்டையான தலைமுடி வைத்து பார்க்கப்பட்டது. தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!