இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்த விஜய்

நடிகர் விஜய் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

அதுமட்டுமின்றி அவர்கள் மத்தியில் பேசும் போது, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியில் உள்ளது போல் வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியினர் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்டரீதியாக அணுகி வெல்ல வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!