முன்னணி நடிகர்களிடம் தமன்னா கேட்க விரும்பும் கேள்விகள்…!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் காவாலா பாடலுக்கு அவர் ஆடும் நடனம் பெரியளவில் பிரபலமாகி இருக்கிறது. பெரிதும் விரும்பப்படும் நடிகையாக மாறியிருக்கும் தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் டாப் நடிகர்களிடம் தான் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “எனக்கு விஜய்யிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தால், ‘தளபதி 68’ படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன். அந்த படத்தில் நான் நடிப்பதாக வரும் தகவலில் உண்மையில்லை. ஆனால் அதில் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது.

தனுசை பார்க்கும்போதெல்லாம், ‘மும்பைக்கு எப்போது வந்தாலும் கால் பண்ணுங்க’ என்று சொல்வேன். ஆனால் அவர் போன் பண்ணவே மாட்டார். எனவே இந்தமுறையும் அதே கேள்வியை கேட்பேன்.

சூர்யாவை நேரில் பார்த்தால் ‘கங்குவா’ படத்தின் கதை என்ன? என்று கேட்பேன்” என்று ஜாலியாக தெரிவித்தார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!