பிரபாஸ் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பிய இயக்குனர் ராஜமவுலி

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ (Project K). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘புராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியானது. ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பாராட்டி இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் மீத உள்ளது என்று கூறி படத்தின் வெளியீட்டு தேதி எப்பொழுது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!