இந்த காட்சிகள் இடம்பெறவே கூடாது.. மாவீரன் படத்திற்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து ‘மாவீரன்’ திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த படத்தில் மிஷ்கின் நடித்துள்ள காட்சிகளில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எந்த அரசியல் கட்சியும் குறிப்பிடப்படவில்லை என படத்தின் ஆரம்பத்தில் 15 வினாடிகளும் இடைவேளையில் 15 வினாடிகளும் படம் முடியும் போது 10 வினாடிகளும் மொத்தம் 40 வினாடிகள் பொறுப்பு துறப்பு வெளியிட வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு படத்தை வெளியிட அனுமதித்துள்ளார்.

மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காதவாறு காட்சிகள் இடம்பெற வேண்டும் என்றும் அதற்கு ஏற்றவாறு காட்சியில் உள்ள கொடியின் நிறத்தை மாற்றி ஓடிடி மற்றும் சாட்லைட் சேனலில் வெளியிட உத்தரவிட்டுள்ளார்.


https://youtube.com/watch?v=2NZ2GYPAyFk
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!