ட்ரெண்டில் இணைந்த மாதவன்.. ராக்கெட்ரி படக்குழுவுக்கு கிடைத்த சிறப்பு பரிசு

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் மாதவன் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை ஈட்டியது. மேலும், இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதையடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை மாதவன் பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!