சமூக கருத்துகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.. மாரி செல்வராஜ் நம்பிக்கை

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் கமல்ஹாசன், தனுஷ் மற்றும் பலர் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் “என் மனதில் இருப்பதை நான் படமாக எடுத்துவிட்டேன். மக்களின் முழுமையான கருத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக மக்கள் நல்ல விஷயங்களை, நல்ல கருத்துக்களை, சமூகத்திற்கு தேவையான கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த படம் எல்லா மக்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் என்ன நினைத்து படம் எடுத்தேனோ அது மக்களுக்கு போய் சேந்திருக்கிறது” என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!