முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம் வாழ்க்கை சினிமா படமாகிறது

அரசியல் தலைவர்கள் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படங்களாக வந்துள்ளன. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ். ஒய்.ராஜசேகரரெட்டி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.

இந்த வரிசையில் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு பாபுஜி என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஜெகஜீவன்ராம் கதாபாத்திரத்தில் மிலிட்டரி பிரசாத் நடிக்கிறார். திலீப்ராஜா டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் குண்டூரில் தொடங்கி உள்ளது. ஜெகஜீவன் ராம் மகளும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான மீரா குமார் நேரில் சென்று கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அப்போது மீரா குமார் பேசும்போது, ”மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று எனது தந்தை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். நிறையபேரை போராட்டத்தில் பங்கெடுக்க செய்தார். அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் படத்தில் இடம்பெற வேண்டும்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!