ரசிகர்களை தியேட்டருக்கு அழைக்கும் நடிகை

பிரபல இந்தி நடிகை ராணிமுகர்ஜி. இவர் தமிழில் கமல்ஹாசனுடன் ஹே ராம் படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது ராணிமுகர்ஜி நடிப்பில் மிஸ்ஸஸ் வெர்சஸ் நார்வே படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.இந்த நிலையில் ராணிமுகர்ஜி அளித்துள்ள பேட்டியில், “திரைப்படங்கள் தியேட்டர்களில்தான் வெளியாக வேண்டும். எனது படங்களும் தியேட்டர்களில் வருவதையே விரும்புகிறேன், தியேட்டரில் வந்து சினிமா பார்ப்பது என்பது நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன்.

நான் தியேட்டருக்காகவே படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தை தியேட்டரில் உட்கார்ந்து ரசித்து பார்ப்பதற்கும், வீட்டில் உட்கார்ந்து ஓ.டி.டி.யில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரசிகர்கள் தியேட்டரில் வந்து படங்கள் பார்க்க வேண்டும். அதுவே நீங்கள் நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கும் மரியாதை ஆகும்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!