எந்த வகையான மதுவை குடிப்பீர்கள் ரசிகர் கேட்ட கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்த சுருதிஹாசன்..!

கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சுருதிஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு ஸ்ருதி, ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!