கமல் படப்பிடிப்பில் இணைந்த காஜல் by priya | @ | March 2, 2023 9:11 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தினத்தந்தி மார்ச் 1, 10:34 pm Text Size ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு பாதியிலே நின்று போனதாலும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பெற்று சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததாலும் இந்தியன் 2 படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தகவல் பரவியது. இதனை காஜல் அகர்வால் மறுத்ததுடன் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் படத்துக்காக குதிரையேற்ற பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தற்போது இணைந்துள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பி இருக்கிறேன். இந்த படம் விரைவில் திரைக்கு வரும்” என்று குறிப்பிட்டு உள்ளார். மேக்கப் அறையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…