என் பயணத்தின் போது ஸ்தம்பித்து நின்ற இடம் ‘வாத்தி’ – பாரதிராஜா நெகிழ்ச்சி

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாத்தி’ திரைப்படத்தை பாராட்டி இயக்குனர் பாரதி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கள்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படி என் பயணத்தின் போது ஸ்தம்பித்து நின்ற இடம் தான் ‘வாத்தி’.

கல்வி இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை கூறுகிறது ‘வாத்தி’. தனுஷ் என் பிள்ளை மாதிரி. அவன் பொழுதுபோக்கிற்காக படம் செய்தாலும் சமுதாய நோக்கத்திற்காக செய்கிறான். இப்படி ஒரு பிள்ளை கிடைப்பதற்கு திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும். அவன் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன் சிந்தனை மனிதன் தனுஷ். எத்தனையோ முத்துக்கள் இருக்கிறது திரையுலகில் அதில் ஒரு சிறந்த முத்து சமுத்திரக்கனி. சம்யுக்தா விடம் ஒரு டீசருக்கான அம்சம் இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் ஒரு பெரிய வரப்பிரசாதம். இந்த வருடத்தில் இசையமைப்பிற்கும் சரி நடிப்புக்கும் சரி ஜி.விக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.







  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!