ஷாருக்கானாக மாறிய டேவிட் வார்னர்..

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் நடித்துள்ள படம் பதான். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியானது. இதுவரை பதான் படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய சினிமாவிக்கு தீவிர ரசிகர். அவர் பல்வேறு இந்திய படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். சமீபத்தில் வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்களுக்கு நடனமாடி பலரையும் கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.

இந்நிலையில் வார்னர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான பதான் படத்தில் சில காட்சிகளில் ஷாரூக்கானுக்கு பதிலாக டேவிட் வார்னர் தனது முகத்தை மாற்றி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘ஆஹா என்ன படம், இதற்கு பெயர் வைக்கலாமா??’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!