இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, ”கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை” என்று கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!