ஜல்லிக்கட்டுக்காக ஆண்டவர் எடுத்துள்ள முடிவு.. மொத்த தமிழ்நாடு திரும்பி பார்க்க வைக்கும் சம்பவம்

தமிழ்நாட்டில் பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான் ஸ்பெஷல். அதிலும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து கூட மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டை வந்து பார்ப்பார்கள்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் தான் அதிகம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதனால் அது சென்னையை தவிர அனைத்து ஊர்களிலும் உள்ளவர்களும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். சென்னையில் உள்ளவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டை பார்க்க முடியாமல் இன்று வரை இருந்து வருகிறார்கள்.

இதனால் சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களில் தான் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புகின்றனர். இப்படி ஒரு சூழலில், எப்போதும் புது விதமாக யோசிக்கும் கமல் தற்போது தமிழகத்தையே திரும்பி பார்க்கும் வைக்கும் அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார்.

அண்மையில் ஜல்லிக்கட்டு சென்னையில் நடத்த தமிழக அரசிடம் கேட்டுள்ளார். அரசு இவருடைய கோரிக்கையை ஏற்றாலும் கமல் கேட்ட இடத்தை தமிழக அரசு கொடுக்க முடியாது என்றதாம். அதனால் அதிரடி முடிவெடுத்த ஆண்டவர் சென்னைக்கு வெளியே மிகப்பெரிய இடத்தை பெரும் தொகை கொடுத்து வாங்க உள்ளார்.

இதில் ஜல்லிக்கட்டு நடத்தி சென்னை மக்கள் இனிமேல் வருடம் வருடம் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறார். இது கமலுக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தரும் என்பது உண்மை. இந்த வருடம் சென்னையில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாவிட்டாலும் அடுத்த வருடம் நிச்சயம் நடத்துவதற்காக எல்லா பணிகளையும் கமல் மேற்கொண்டு வருகிறாராம்.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு ரத்து செய்ய போவதாக தமிழக அரசு அறிவித்த போது, சென்னையில் தான் இளைஞர்கள் பெரும்பாலானோர் திரண்டு அந்தக் கோரிக்கையை திரும்ப வாங்கும் வரைக்கு இரவு பகலாக போராட்டம் நடத்தினர். அப்படிப்பட்ட சென்னையில் இருக்கும் இளைஞர்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களும் ஜல்லிக்கட்டை வருட வருடம் பார்க்க வேண்டும் என கமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இவருடைய இந்த முடிவுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!