‘வாரிசு’ கொண்டாட்டம் ஆரம்பம்.. வைரலாகும் புகைப்படம்..

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ‘வாரிசு’ படக்குழு சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘வாரிசு கொண்டாட்டங்கள் ஆரம்பம்’ என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!