இதனால்தான் நீங்க தளபதி.. விஜய்யை பாராட்டிய ஷாருக்கான்..

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!