மூன்றாவது படத்துக்கே பல கோடி சம்பளத்தை உயர்த்திய பிரதீப்..

ஒரே பட வெற்றியால் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் என்று தான் கூறவேண்டும். மூன்று தயாரிப்பாளர்களை தாண்டி பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி போட்டு வெளியிட்டார். அந்த நிறுவனமும் முழு நம்பிக்கை வைத்து லவ்டுடே படத்தை வெளியிட்டது.

எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி பார்த்தது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக கிட்டத்தட்ட 80 கோடிகள் கலெக்ஷன் செய்து ஜெயித்து காட்டியது என்று தான் கூற வேண்டும். டாப் ஹீரோக்கள் ப்ளாப் படங்கள் கொடுத்து வரும் இந்த சூழ்நிலையில் இளம் இயக்குனர் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுள்ளார்.

தமிழில் கிடைத்த வெற்றியை வைத்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் வசூல் வேட்டை ஆடியது. இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் 80 லட்சம் சம்பளமாக வாங்கியிருந்தார் ஆனால் படத்தின் வெற்றியை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் மேலும் 70 லட்சம் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு கோடியே 50 லட்சம் சம்பளமாக வழங்கி உள்ளது.

அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுக்கு இயக்குனராக புக்கிங் செய்யப்பட்டார் அதிலும் முக்கியமாக தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்கவும் உள்ளார். லவ் டுடே படத்தின் வெற்றியை வைத்து தற்போது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் பிரதீப். அதாவது 3 கோடி முதல் 4 கோடி வரை தயாரிப்பாளர்களின் முதலீடு பொருத்து கேட்டு வாங்கிக் கொள்கிறார் ஆம். லைக்கா போன்ற பெரிய நிறுவனங்கள் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க ரெடியாக உள்ளனர்.

முதலாளிகளும் இந்த சம்பளத்தை கொடுப்பதற்கு மறுப்பதில்லை ஏனென்றால் வசூல் ரீதியாக லாபத்தை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை. ரஜினியை தவிர விஜய்க்கு கதை கூறியுள்ள பிரதீப் விரைவில் லோகேஷ் போல அடுத்த ஐந்து ஆண்டுக்கு பிசியான இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இரண்டு,மூன்று படங்களையே பல கோடி சம்பளம் வாங்கும் இளம் இயக்குனர்களை பார்த்து பிரம்மாண்ட இயக்குனர்களை அசந்து போயுள்ளனர். முன்பைவிட தற்போது இதுபோன்ற இயக்குனர்களுக்கு பொறுப்பு ஜாஸ்தியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஒரு தோல்வி படம் கொடுத்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்ற பயத்தில் தான் வேலை பார்த்து வருகின்றனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!