புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த டிரைவர் ஜமுனா படக்குழு

வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கட்டிருந்தது. அதனபின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!