முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்திருக்கிறார்கள் – பார்த்திபன் வேதனை

1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் பார்த்திபன் விமர்சனங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. அதில், அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம், அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு “பிடிக்கவில்லை” என்ற கருத்தை வரவேற்கிறேன். ஆனால் அதை கெட்ட வார்த்தைகளால் எழுதும்போதுதான் மனம் வலிக்கிறது. என் வளர்ச்சிக்காக, முழுமனதாக, அழகாக, கவிதையாக, வாழ்த்துவதாக எழுதும் பல நல்ல உள்ளங்கள் அதை (கேடுகெட்ட negativity) எப்படி தவிர்க்கிறீர்கள்/தவிக்கிறீர்கள் என்பதை நினைக்கவே மனம் கூசுகிறது! என்று பதிவிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!