வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ?

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் வாரிசு வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா.. மேடையை அதிரவிட போகும் விஜய்யின் ஸ்பீச் | Varisu Movie Audio Launch Function
அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் ‘ ரஞ்சிதமே’ வெளிவந்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்பாடல் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் ஸ்பீச்சை மேடையில் காணவும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், பிரமாண்டமாக நடக்கவிருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகுமா என்று காத்திருந்து பார்ப்போம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!