பொன்னியின் செல்வனில் புறக்கணிக்கப்பட்ட வைரமுத்து..

தற்போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது இதன் பிரமோஷன் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான பிரஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் மணிரத்தினத்திடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது.

அவை அனைத்திற்கும் அவர் நிதானமாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கவிஞர் வைரமுத்துவை கலைஞர் கருணாநிதியே தன் அருகில் அமர வைத்து பெருமைப்படுத்தினார். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் பொன்னியின் செல்வன் விழாவிற்கு அழைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத மணிரத்தினம் மிகவும் சாமர்த்தியமாகவும், அதேசமயம் மழுப்பலாகவும் பதிலளித்தார். அவர் கூறியதாவது, வைரமுத்து மிகப்பெரிய கவிஞர், அவருடன் நான் நிறைய திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அதேபோன்று தமிழ் மொழி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

அதில் நமக்குத் தெரியாத பல சிறப்பம்சங்களும் இருக்கிறது. அந்த வகையில் தமிழில் வைரமுத்துவயும் தாண்டி பல சிறந்த கவிஞர்களும் இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் அவரின் இந்த பதில் சரியான பதிலாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மணிரத்தினத்தின் இந்த பதிலுக்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது வைரமுத்துவின் மீது சமீப காலமாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி வருகிறது. அதிலும் பாடகி சின்மயி அவரின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். இதுதான் மணிரத்தினம் வைரமுத்துவை புறக்கணிக்க காரணம். ஆனால் அதை அவர் வெளிப்படையாக கூறாமல் ஏதோ ஒரு பதிலை கூறி மழுப்பி இருக்கிறார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!