விக்ரமின் கோப்ரா திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் அட்டர் காப்பியா.. ஷாக்கிங் செய்தி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதல் முறையாக விக்ரம் நடித்து கடந்த 31ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மீனாட்சி, இஃபார்ன் பதான் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.வெளிவந்த நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாக தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சி ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என வீடியோ ஒன்று வெளியானது.அதை தொடர்ந்து தற்போது Greek மொழியில் வெளியான The Other Me எனும் படத்தை காப்பியடித்து தான் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!