படத்திற்காக சூர்யா எடுக்கும் முயற்சி.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் சூர்யா 42 படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா இதுவரை அவர் ஏற்காத கதாப்பாத்திரத்தை வடிவமைத்து வருவதாகவும் இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!