என் படத்துல போதை, சரக்கு வைக்க இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லோகேஷ்

மாநகரம் தொடங்கி விக்ரம் வரை ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி 67 படத்தை இயக்குவதில் மும்மரம் காட்டி வருகிறார். மற்ற இயக்குனர்களை காட்டிலும் இவரது படத்தில் வித்யாசமான சில விஷயங்களை பயன்படுத்தி இருப்பார்.

மேலும், மாஸ்டர், கைதி, விக்ரம் என போதை சம்பந்தமான விஷயங்கள் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இதுபோன்ற காட்சிகளை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்று ஒரு ஊடகத்தில் லோகேஷ் பேட்டி கொடுக்கும்போது கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது தற்போது சாதாரணமாக தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் கையில் கூட சரக்கு, சிகரெட் போன்ற விஷயங்களை பார்க்க முடிகிறது. இதை முற்றிலுமாக தடுக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். என்னுடைய படத்தில் வைப்பதற்கான காரணமும் அதுதான்.

இதனால்தான் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எவ்வாறு போதைக்கு அடிமையாகி உள்ளார்கள் என்பது மாஸ்டர் படத்தில் காண்பிக்கப்பட்டது. விஜய், விஜய் சேதுபதி, கமலஹாசன் போன்றோர் போதை அடிமையாகி எப்படி மீண்டும் வருகிறதை பார்த்தால் ரசிகர்கள் அவர்களிடமிருந்து ஒரு பத்து சதவீதம் ஆவது எடுத்துக் கொள்வார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை.

தளபதி, உலகநாயகன் போன்றோர் இதுபோன்ற நடித்தால் கண்டிப்பாக அவர்களது ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும் விக்ரம் படத்தில் கார்த்தியின் கைதி படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை வைத்ததற்கும் இதுதான் காரணம் என லோகேஷ் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையான படங்களை எடுப்பேன் என்றும் லோகேஷ் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்திற்கான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!