வசூலில் முன்னேறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

“திருச்சிற்றம்பலம்” திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியையும் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியையும் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேலும், முதல் வாரம் மட்டும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரூ.51.42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போது வரை ரூ.59.50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!