பொன்னியின் செல்வன் வசூலுக்கு இப்படியொரு பிரச்சனையா! அதுக்கு தனுஷ் தான் காரணமாம்

மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மூன்றாவது பாடலும், ட்ரைலரும் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
வசூலுக்கு பிரச்சனையா

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் அதே நாளில் தனுஷ், செல்வராகவனின் நானே வருவேன் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் வசூலுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம், நானே வருவேன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்னவென்று. 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!