அட்லீயை மறைமுகமாக தாக்கி பேசிய ஹிந்தி இயக்குனர் ! இப்படி சொல்லிட்டாரே

தமிழில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீ
ஷாருக்கான் மற்றும் அட்லீ இருவரும் இணைவதாக அறிவித்து அதிக தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் ஜவான் ஷூட்டிங் தொடங்கியது.

அட்லீக்கு பாலிவுட்டில் வெற்றி கிடைக்குமா என ரசிகர்களும் அதிகம் ஆர்வத்துடன் படத்திற்காக காத்திருக்கின்றனர்.

மறைமுகாக தாக்கி பேசிய அனுராக் காஷ்யப்  
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் அளித்திருக்கும் பேட்டியில் ‘ஏன் தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுகின்றன, ஹிந்தி படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன’ என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

ஹிந்தி தெரியாதவர்கள் இங்கு ஹிந்தியில் படம் எடுத்து கொண்டிருகிறார்கள், தமிழ் – தெலுங்கில் அந்த நிலை இல்லை. அவர்களது கலாச்சாரத்துடன் அது ஒன்றி இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் ஹிந்தியில் படம் எடுப்பதால் அது rooted ஆக இருப்பதில்லை.

இந்த நிலை மாறினால் ஹிந்தி படங்களும் வெற்றி பெறும் என அனுராக் காஷ்யப் தெரிவித்து இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!