சூர்யா 43 திரைப்படத்திற்காக இணையும் மெகா ஹிட் கூட்டணி ! இயக்குநரே அளித்த தகவல்கள்

சூரரை போற்று 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யாவிற்கு பல வருட கால திரைபயணத்திற்கு பிறகு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. முதன்முதலாக ஒரு டாப் நடிகரின் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியானது.

அப்படியான இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். மேலும் சமீபத்தில் தான் இப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது, அதில் நடிகர் சூர்யா சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூர்யா 43
இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவரின் ஹிந்தி திரைப்படத்தை முடித்தபின் சூர்யாவின் திரைப்படத்தை தான் இயக்கவுள்ளதாக பேசியுள்ளார்.

மேலும் சூர்யாவின் 43 திரைப்படமாக உருவாகவுள்ள அப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான நடிக்கவில்லை, இணையத்தில் இப்படம் கேஸ்டர் திரைப்படம் என பரவிம் நிலையில் அது குறித்து எந்த ஒரு விஷயத்தையும் சுதா கொங்கரா கூறவில்லை.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!