மீண்டும் உடல் எடையை அதிகரித்த நடிகர் சிம்பு.. காரணம் இதுதானா

நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது மாநாடு.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்தாக மஹா எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன்பின், வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.


கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல் இப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

உடல் எடையை அதிகரித்த சிம்பு
இப்படம், கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த சிம்பு, தற்போது பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!