பகத் பாசிலுக்கு பதிலாக நடிகர் தனுஷ் ! முக்கிய திரைப்படத்தில் அவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு..

 பகத் பாசிலின் கதாபாத்திரத்தில் தனுஷ்
நடிகர் பகத் பாசில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் அவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி மற்ற மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த விக்ரம் மற்றும் புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு இந்தியளவில் பெரிய பெயரை பெற்று தந்தது.

அப்படங்களை தொடர்ந்து அவர் நடிப்பில் Malayankunju என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்துள்ள பகத் பாசில் சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஆம் அவர் நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற Kumbalangi Nights திரைப்படத்தில் ஷமி கதாபாத்திரம் நடிகர் தனுஷிற்காக எழுத்தியதாம். ஆனால் அப்படத்தின் பட்ஜெட் காரணமாக தனுஷை தொடர்ப்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார் பகத் பாசில்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!