தளபதி 67ல் விஜய்க்கு வில்லியாகும் முன்னணி நடிகை?

விஜய் தற்போது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வருகிறது.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67ல் நடிக்க இருக்கிறார். விக்ரம் ஹிட் ஆன நிலையில் அடுத்து லோகேஷ் இயக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்த்து எழுந்திருக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக ஒரு டாப் நடிகையை நடிக்க வைக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

சமந்தா தான் விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!