மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி.. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

ராட்சசன்
ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன்.
இப்படத்திலும் இதே கூட்டணி மீண்டும் தொடர்ந்தது. முண்டாசுப்பட்டி படத்தை விட பல மடங்கு வெற்றியை இவர்களுக்கு பெற்று தந்தது ராட்சசன்.

இப்படத்தில் அமலா பால், முனீஸ்காந்த், அம்மு அபிராமி, சூசன், சரவணன் என பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்கள்.

மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி
இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ராம் குமார் – விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் இரு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது

நிலையில், அடுத்ததாக இந்த கூட்டணியில் இருந்து வெளிவரவிருக்கும் படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!