அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட். கவனம் ஈர்க்கும் போஸ்டர்

அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி

.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.


படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!