தள்ளிப்போகும் அஜித்தின் AK61 ! தீபாவளியில் மோதவுள்ள இரண்டு முக்கிய நடிகர்கள்..

தள்ளிப்போகும் அஜித்தின் திரைப்படம் 
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் AK61, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் தீபாவளியில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது தீபாவளியில் இரண்டு முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் நடிகர் அஜித்தின் திரைப்பட ரிலிஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயன் திரைப்படம் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.

மேலும் அப்படம் தற்போது தீபாவளியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு முக்கிய நடிகர்களின் திரைப்படம் தீபாவளியில் வெளியாவதால் அஜித்தின் திரைப்படம் வெளியாக வாய்ப்பு குறைவே.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!