பிரபல நடிகரை சாடிய பாடகி சுசித்ரா… வைரலாகும் ஆடியோ

பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

இவர் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். யூ-டியூப் சேனல் நடத்தி வரும் இவர் தனது சேனலின் மூலமாக பல முன்னணி நடிகர்களை குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி வந்துள்ளார்.

இதனால், கோபமடைந்த பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார்.

அதன்படி, தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் பிரபல பாடகி சுசித்ராவை பற்றி சர்சை கருத்துக்களை பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா, பயில்வானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சாடியுள்ளார். இந்த ஆடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!