அப்டேட் கொடுத்த ஜெயம் ரவி.. கொண்டாடும் ரசிகர்கள் by priya | @ | May 28, 2022 10:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் படத்தின் அப்டேட்டை அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பூமி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அகிலன்’. இப்படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விவேக் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ‘அகிலன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, இப்படத்தின் டீசர் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…