மிகப்பெரும் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்த தனுஷ்

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்.

இவர் நடிப்பில் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நேற்று எல்லோரும் அதிர்ச்சியாகும்படி தனுஷின் வொண்டர்பார் யுடியூப் சேனல் ஒரு சில விஷமிகளால் முடக்கப்பட்டது.

இதனால் பல மில்லியன் சென்ற ரவுடி பேபி பாடல் எல்லாம் இனி வருமா என்ற நிலை உருவானது.

ஆனால், ஒரே நாளில் தற்போது அந்த சேனலை மீட்டு உள்ளனர், இதனால் ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த சேனல் மட்டும் முடக்கப்பட்டது தொடர்ந்திருந்தால் தனுஷுக்கு பல கோடிகள் நஷ்டம் ஆகியிருக்கும்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!