தள்ளிப்போகும் விக்ரமின் கோப்ரா திரைப்படம்.. வருத்தத்தில் ரசிகர்கள்

விக்ரமின் கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா.

இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்பில் நடித்துள்ளார். அதனை நாம் First லுக்கில் பார்த்திருந்தோம்.

இதன்பின் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளிவந்த அதிரா படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்
இந்நிலையில், இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா திரைப்படம் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது.

ஆம், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி தான், கோப்ரா படம் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!