நாங்களும் இந்தியர் தான் சார்.. அஜய் தேவ்கனுக்கு சுதீப் பதிலடி!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் “ஹிந்தி தான் தேசிய மொழி” என கூறிய ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது. தென்னிந்தியாவில் ஹிந்தி திணிப்பு மீது கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது அஜய் தேவ்கன் போட்ட ட்விட் வைரல் ஆனது.

கேஜிஎப் 2 வெற்றி பற்றி பேசிய கன்னட நடிகர் சுதீப் “ஹிந்தி தேசிய மொழி அல்ல” என கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக தான் இப்படி ஒரு ட்விட் போட்டிருக்கிறார்.

சுதீப் பதிலடி
இந்நிலையில் தற்போது சுதீப் அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். “நீங்கள் ஹிந்தியில் போட்ட ட்விட் எனக்கு புரிந்தது.

நாங்கள் ஹிந்தியை மதித்து, காதலித்து, கற்றுக்கொண்டதால் தான். No offense சார்.. ஆனால் நான் இந்த ட்விட்டை கன்னடத்தில் போட்டிருந்தால் உங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும். நாங்களும் இந்தியர் தான் சார்” என குறிப்பிட்டு இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!