பில்லா படத்திற்கும் முன்பே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த நயன்தாரா ?

அஜித் – பேரரசு கூட்டணி 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது அவரின் 61-வது படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது, அப்படத்தின் மீண்டும் மூன்றாவது முறையாக அதே கூட்டணியுடன் இணைந்துள்ளார் அஜித்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருப்பதி. இப்படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகியுள்ளதால் இயக்குனர் பேரரசு இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.  

நயன்தாராவுக்கு கிடைத்த வாய்ப்பு 

அப்போது பேரரசு திருப்பதி படத்தில் சதாவிற்கு முன்பே நயன்தாராவை கதாநாயகியாக தேர்வு செய்து இருந்தோம். ஆனால் அப்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து கொண்டு இருந்ததால் தேதி பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்

மேலும் இப்படத்தின் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்த போது ரொம்ப சந்தோஷபட்டதாகவும், தெலுங்கு பட தயாரிப்பாளரிடம் பேசியாவது இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஆசைப்பட்டதாகவும் பேரரசு தெரிவித்துள்ளார்.

அதன்பின் அடுத்த வருடமே நயன்தாரா, அஜித் இருவரும் பில்லா திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்படமும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!