கமலின் விக்ரம் படத்தின் கதை இதுதானா.. இணையத்தில் கசிந்த தகவல்

கமலின் விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம், வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை இதுதான் என்பதுபோல் தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

கதை இதுதானா

அதில், கதைப்படி விஜய் சேதுபதி ஜெயிலில் கைதியாக இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும்படி பகத் பாசிலுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. அதனால் பகத் பாசிலும் குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

இவர்களின் இந்த தவறான வேலைகளை தெரிந்து கொண்ட கமல் ஹாசன், இந்த முயற்சியை முறியடிப்பதற்காக அதே ஜெயிலுக்கு செல்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது தான் விக்ரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!