KGF 2 படத்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர் ! “தமிழ் சினிமாவை கெடுக்காதிங்க”..

பீஸ்ட் & KGF 2 

சமீபத்தில் பீஸ்ட், KGF 2 என இரண்டு பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்கள் இடைவெளியில் வெளியானது.

மேலும் இரண்டு திரைப்படங்களும் பெரியளவில் தமிழகத்தில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஆனாலும் பலர் பீஸ்ட் படத்தை விமர்சித்து KGF 2 படத்தை புகழ்ந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான CV குமார் KGF 2 படம் குறித்த சர்ச்சையான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

விமர்சித்த தயாரிப்பாளர்  

அதில் “ஓரு முள்ளும் மலரும், கல்யாண பரிசு, காதலிக்கநேரமில்லை, recently ஆடுகளம், சூதுகவ்வும், முண்டாசுபட்டி சதுரங்கவேட்டை, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, மெட்ராஸ், ககபோ, தீரன் அதிகாரம் ஒன்று, இறுதிசுற்று, வடசென்னை, ராட்சாசன், அசுரன், பரியேறும் பெருமாள், கைதி, சார்பேட்டா பரம்பரை, ஜெய்பீம், டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா.

இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படம், ஆனால் எங்கள் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு நிலைக்கு இணையாக இல்லை என்பது எனது உணர்வு” என பதிவிட்டுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!